×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

சமூக ஊடகம் எனும் மாயவலை!

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

எந்த ஒரு மனிதனும் ஒரே நதியில் இருமுறை குளிக்க முடியாது. ஏனெனில், அடுத்த முறை நதியும் மாறியிருக்கும், மனிதனும் மாறியிருப்பான் – ஹீராக்ளிட்டஸ். இந்த வரிகளைப் படித்தவுடன் தோன்றியது இதுதான். இன்றைய சினிமாவும், சோசியல் மீடியாவும் ஒரே மாதிரி தாக்கத்தைக் கொடுப்பதில்லை. நொடிக்கு நொடி மனிதர்களின் பார்வையை மாற்றிக்கொண்டே வருகிறது. அப்படி நிலையில்லாத நிலையிருக்கும் தகவல்களைச் சொல்லித்தரும் சோசியல் மீடியா இன்றைக்கு அனைவரின் தாய்மொழியாக ஆடியோ மற்றும் விஷுவல் மீடியா உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது.

போன தலைமுறையில் இருப்பவர்கள் பலரும் சினிமாவைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள். சினிமாதான் உங்களை எல்லாம் கெடுக்கிறது என்றார்கள். இன்று சினிமாவைவிட சோசியல் மீடியா மது அல்லாத ஒரு தீவிர அடிக்சனுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் கருந்துளை போல் அனைவரையும் உள்ளே இழுத்து விடுகிறது.இன்றைக்கு, ஒரு சினிமாவும், டிவியும் சோசியல் மீடியாவை வைத்து என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம். சினிமாத்துறை மற்றும் தொலைக்காட்சித்துறையும் காலத்திற்கேற்றவாறு பலராலும் கொண்டாடக்கூடிய ஒரு துறையாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் நிஜ உலகில் நடக்கும் வலியினை கற்பனை கலந்து அதில் போராடக்கூடிய ஒரு நபராக மாற்றும் தன்மையை மொழி, கலாச்சாரம் இல்லாத எல்லாவித மக்களுக்கும் விஷுவல் விருந்தாக வைக்கிறது.

ஒவ்வொரு நிலத்தின், கலாச்சாரத்தின், வரலாற்றின் மாற்றத்தை, வீடுகளில் மற்றும் இளைஞர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த தொலைக்காட்சியும் என்ன செய்தது என்பது அத்துறையின் வரலாறு தெரிந்தவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இப்படியாக சினிமாவும், தொலைக்காட்சியும் தங்களுடைய நிஜத்தையும், கற்பனையையும் மக்களுக்கு கலந்து கட்டி தரும் போது, மனிதன் சிரித்து, சண்டை போட்டு, ரொமான்ஸ் பண்ணி, அழுது என்று ஒரு மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்த திருப்தியுடன் வருகிறார்கள். இதற்காகதான் வெகுஜன மக்கள் ஒவ்வொரு ஹீரோக்களையும், இயக்குனர்களையும் பார்த்து பூரிப்படைகிறார்கள்.

ஆனால் இன்றைய சினிமாவும், தொலைக்காட்சி நிகழ்வுகளையும் பார்க்கும் போது, மனதில் பயமும், பதற்றமும் வராமல் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுக்காக இளைஞர்களின், ரசிகர்களின் சண்டைகள் எல்லாமே வன்மத்தை வெளிப்படுத்துவது மட்டுமில்லாமல் தனிநபரை தாக்கியும் விரோதத்தை வளர்க்கிறார்கள்.

தொலைக்காட்சி வந்த காலக்கட்டத்திலேயே பொது அறுவைசிகிச்சை அறிவியல் கமிட்டியில் இருப்பவர்கள் 1969இல் 15 வயதுக்குரியவர்கள் தொடர்ந்து சீரான மனநிலையில் இருக்க முடியாமல் இருப்பதாக கூறினார்கள். 1982 இல் அமெரிக்க மனநல மையத்தில் இருந்து டிவியில் காண்பிக்கும் காட்சிகளும் மற்றும் சினிமாவில் காண்பிக்கும் காட்சிகளின் வலியினை குழந்தைகளால் தாங்க முடியவில்லை என்றும், அந்த சத்தங்கள், அதில் வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்துமே குழந்தைகளுக்கு உலகத்தை பார்த்து பயம் தான் வருகிறது என்றும், அதன் தாக்கத்தால் குழந்தைகள் மிகவும் கோபமாக அவர்களின் வலியினையும், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பதையும் தினம் தினம் வீட்டிலும், பள்ளியிலும் செய்கிறார்கள் என்று மனநல மையத்தில் இருந்து விழிப்புணர்வு செய்தனர்.

சினிமா, தொலைக்காட்சிகளை கடந்து வந்து பார்த்தால், மிகப்பெரிய சுனாமிக்கிட்ட வந்து சிக்கிய கதையாக தற்போதைய தலைமுறை சோசியல் மீடியாவில் வந்து நிற்கிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சியின் தாக்கம் கூட பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு வெகுஜன மக்களாலும், அறிவியல் விஞ்ஞானிகளாலும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

சோசியல் மீடியா பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளாக, உதாரணமாக உடல் பாதிப்பாக கை செயல் இழந்து விடும், கால் செயல் இழந்து விடும் என்று தெரிந்திருந்தால் மக்கள் கண்டிப்பாக பயந்து இருப்பார்கள். ஆனால் மனதை பாதிக்கும் என்று கூறும் போது, அதெல்லாம் ஒன்றும் இல்ல, நாங்களே ஊருக்கு கவுன்சிலிங் செய்கிறவர்கள் என்று எளிதாக பேசிவிட்டு செல்கிறார்கள்.

மக்களை என்றுமே அறிவியல் எளிதாக கடந்து விடாது. அவர்களை இழுத்துப் பிடித்து, உட்கார வைத்து பாடம் நடத்தும். அதனால் மக்களுக்கு புரியும் விதமாக தற்போதைய மனநல மருத்துவத்துறை எளிதாக சோசியல் மீடியாவால் ஏற்படும் சாதக, பாதகங்களையும், சிகிச்சை முறைகளையும் கூறினார்கள்.

ஒரு நாளைக்கு சோசியல் மீடியாவை இந்திய மக்கள் பயன்படுத்தும் அளவு 7.3 மணி நேரம். இது அமெரிக்கா மற்றும் சீனாவை விட அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறோம். தூங்கி எழுந்ததும் முதல் ஒரு மணி நேரத்தை மொபைலில் இருப்பவர்கள் 70 % பேர் என்றும், இரவில் படுத்த பின்பும் 56 % பேர் மொபைலில் இருப்பவர்கள் என்றும், ஒரு வாரம் இன்டர்நெட் பயன்படுத்தவில்லை என்றால் பயம் அதிகரிப்பதாக 44% மக்கள் இந்தியாவில் கூறுகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 2014 இல் பிரான்சில் குழந்தைகள் படிக்குமிடத்தில் இன்டர்நெட் இருக்க கூடாது என்று கூறி விட்டார்கள். 2015 இல் தாய்வானில் குழந்தைகள் படிக்குமிடத்தில் வைபை (Wifi) இருக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள்.International Jounal of Advanced Academic Studies அதில் உத்தரகாண்ட்டில் இருக்கும் ராதா கோவிந்த் பல்கலைக்கழகத்தில் இருக்கும் உளவியல் துறையின் பேராசிரியர் டாக்டர். ஸ்மிரிதிக்கான கோஷ் என்பவர் மீடியா மற்றும் உளவியல் தாக்கங்கள் பற்றிய ஒரு ஆய்வுக்கு கட்டுரை சமர்ப்பித்து இருக்கிறார்.

இன்டர்நெட் அடிக்சன் பற்றிய ஆய்வில் எம்ஆர்ஐ வைத்து தலையை ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது மூளையின் முன்பகுதியில் உள்ள ஆர்பிடோ பான்டல் கான்டெக்ஸ்ட்டில் கிரே மெட்டல் மற்றும் ஒயிட் மெட்டல் குறைந்து காணப்படுகிறது. ஆர்பிடோ பான்டல் கான்டெக்ஸ்ட் பகுதி தான் நம்முடைய முடிவெடுக்கும் திறனும், செயல்படும் திறனும் குறைந்து விடும் என்று எச்சரிக்கிறார்கள். அதனால் மூளையின் செயல்பாட்டின் பாதிப்பை மனபாதிப்பாக எடுத்துக் கொண்டு இன்டர்நெட் அடிக்சன் என்பது மனநோயாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அதனால் விதம் விதமான இன்டர்நெட் பாதிப்பை என்ன மாதிரியான மனநோய் என்று மருத்துவர்கள் வகைப்படுத்தி கூறுகிறார்கள்.

Internet Addiction Disorder Cyber Sexual Addiction

பசிக்கு பின் பாலியலைத் தான் மக்கள் தொடர்ந்து தேடுகிறார்கள். புகைப்படங்கள் கொடுக்கும் மோகம் என்றும் அளவில்லாதது. அதுவும் எதிர்பாலினத்தாரின் புகைப்படம் என்பது கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. இந்திய அளவில் மூன்றில் இரண்டு ஆண்களும், மூன்றில் ஒரு பெண்ணும் இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது செல்பி மூன்று முறை வீட்டிலும், ஊர் சுற்றும் நபராக இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு ஆறு முறை செல்பி எடுப்பதும் வாடிக்கையாக இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த செல்பியை உடனே சோசியல் மீடியாவில் அப்லோடு செய்ய வேண்டும் என்ற பரபரப்பும் அதிகமாகி விட்டது என்கின்றனர்.

உலக அளவில் இந்தியா முன்றாவது இடமாக ஆபாசப்படங்களை பார்க்கும் நாடாக இருக்கிறது. இதில் 78% ஆண்களும், 28% பெண்களும் ஆபாசப் படங்களை விரும்பி பார்க்கின்றனர். தென் இந்தியாவில் 84.2% தினமும் ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களாகவும், இந்த சதவீதத்தில் பாதி நபர்கள் நடு இரவில் பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 69% கல்லூரி மாணவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணி நேரம் தொடர்ந்து ஆபாச திரைப்படங்களை பார்க்கும் பார்வையாளர்களாக இருக்கின்றனர்.

இதில் 30% மாணவர்கள் அவர்களின் பார்ட்னருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றனர். இதன் விளைவாக கல்லுரி படிக்கும் காலத்திலேயே 12% மாணவிகள் கர்ப்பமாக இருக்கிறார்கள். இவை எல்லாமே இன்டர்நெட்டின் தாக்கத்தால் செய்யும் ஆர்வக் கோளாறு என்கின்றனர் மருத்துவர்கள்.இதனால் ஆபாசக் கட்டுரைகள் எழுதுவது, பேசுவது, ஆன்லைனில் படங்களைத் தேடுவது, டவுன்லோட் செய்து வைத்திருப்பது என்று ஒரு பெரும் கோரப்பசியோடு தேடிக் கொண்டே இருக்கின்றனர்.

இன்டர்நெட் என்பதால் வயது வித்தியாசம் இல்லாமல், விதம்விதமாக படங்களை பகிர்கின்றனர். ஒரே வயதில் இருப்பவர்களின் ஆபாச படங்கள், வேறு வேறு வயதில் இருப்பவர்களின் நெருக்கமான காட்சிகள், குரூப் செக்ஸ் மற்றும் சுய இன்பம் செய்பவர்கள் என்று தங்களுடைய கற்பனைகளுக்கேற்றவாறு சைபர் செக்ஸ் அடிக்சனின் தன்மையின் குரூர முகத்தை நேருக்கு நேர் சந்திக்கும் தலைமுறையாக இருக்கிறோம்.

ஆபாசப்படங்களின் துறை என்பது 100 மில்லியன் டாலர் வருமானம் கொடுக்கக்கூடிய துறையாக வளர்ந்து நிற்கிறது. 12% இன்டர்நெட், 35% நெட்பிளிக்ஸ், அமேசான், ட்விட்டர் என்று பார்க்கும் அனைத்து இடங்களிலும் நம் கண் முன்னே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டே நம்மை அழிக்கிறது.எதற்காக இத்தனை மணி நேரங்கள் நம் மக்கள் சைபர் செக்ஸ் மீது ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்று கேட்டால், அதற்கு தரவு ரீதியாக விதம் விதமான பதில்களை கொடுத்து இருக்கிறார்கள்.

ஆபாசப்படங்களை நிஜ வாழ்வின் அழுத்தத்தில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு 81% மக்கள் பார்ப்பதாகவும், 57% மக்கள் தங்களைத் தாங்களே சமாளித்துக் கொள்ள ஒரு பொருளாக வைத்திருப்பதாகவும், 25% மக்கள் செக்ஸ் கல்வி சார்ந்து பார்ப்பதாகவும், 16% மக்கள் சமூகத்தில் தங்களுக்கும் சைபர் செக்ஸ் பற்றித் தெரியும் என்று சொல்வதற்காக
பார்ப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த தரவுகளின்படி இந்தியாவில் 34 வயதுக்குள் பலரும் மனநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் பின்வருமாறு

1. Non Sex Compulsive -83.5%
2.Moderate Sex Compulsive – 11%
3.Sexually Compulsive – 6%
4.Cyber Sexually Compulsive – 1%

என்று சத்தியநாராயணா ரெட்டி என்பவர் ஆய்வு செய்ய, அதற்கு வழிகாட்டியாக டாக்டர். சிவராமி ரெட்டி இருந்திருக்கிறார். அப்போலோ மருத்துவமனை ஹைதராபாத், விநாயக மிஷன் மருத்துவமனை கூட்டணியில் சைபர் செக்ஸ் அடிக்சன் பற்றி இந்த ஆய்வுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Saffron Doctor ,Gayatri Mahdi ,
× RELATED ஷ்ரத்தா ஸ்ரீநாத்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!